புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே காக்காக்காடு கிராமத்தைச் சேர்ந்த செல்வபாண்டி என்பவர் சட்டவிரோதமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூலிப், பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய கார் மூலம் கொண்டு செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை மற்றும் காவல் நிலைய அதிகாரிகள் காவலர்கள் உள்ளிட்டோர் ராஜேந்திரபுரம் பிரிவு ரோடு அருகே சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் சுமார் 128 கிலோ இருந்ததை கைப்பற்றி செல்வபாண்டி அஜித்குமார், குமரேசன், பாலதண்டாயுதம் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து அவர்களிமிருந்து ரூ11,540 ரொக்கம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் இருசக்கர வாகனம் 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நான்கு நபர்களும் விசாரணைக்கு பின் சிறையில் அடைக்கப்பட்டனர்.