தமிழகத்தில் 6 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும்:சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

தமிழகத்தில் இன்னும் 6 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டியுள்ளது என்று சுகாதார செயலாளர் ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.

 11 புதிய மருத்துவ கல்லூரிகளில் ஆய்வு நடக்கிறது, அதன் பின்னர் ஒன்றிய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். மதம் சார்ந்த கூட்டங்கள் மற்றும் குடும்ப நிகழ்வுகளில் பொது மக்கள் கூட்டம் அதிகமாக கூடுவதால், கொரோனா அதிகமாக பரவுகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று புதிதாக 1,896 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 23 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட  அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,57,587 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 1,896 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்நிலையில்  இன்று சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் அவர்கள், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், மதம் சார்ந்த கூட்டங்கள் மற்றும் குடும்ப நிகழ்வுகளில் பொது மக்கள் கூட்டம் அதிகமாக கூடுவதால், கொரோனா அதிகமாக பரவுகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும், 32 மாவட்டங்களில் கொரோனா பரவல் குறைவாக இருந்தாலும், மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் அதிகமாக உள்ளது என்றும், தமிழகத்தில் இன்னும் 6 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டியுள்ளது என்றும், 11 மருத்துவ கல்லூரிகளில் ஆய்வு நடக்கிறது; அதன்பின் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

53 − = 50