தமிழகத்தில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்பிருப்பதாகவும்; ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், சில இடங்களில் மட்டுமே மழைக்கு வாய்ப்பு இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.