தமிழகத்தில் 16 மாதத்தில் மிகப்பெரிய மாற்றம்: பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை அதிரடி!

தமிழகத்தில் 16 மாதத்தில் மிகப்பெரிய மாற்றம் வரும். அதுவரை மக்கள் பொறுத்திருங்கள் என்று ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பா.ஜ., சார்பில் இன்று நவ.15ம் தேதி நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை அதிரடியாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் அருகே இன்று காலை பா.ஜ., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். பால் விலை உயர்வை கண்டித்து அண்ணாமலை கோஷம் எழுப்பினார். அவரைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளும் கோஷம் எழுப்பினர். பின்னர் அண்ணாமலை பேசியதாவது:

தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் நாள்தோறும் ஒவ்வொரு பொருளாக விலையை உயர்த்திஎள்ளனர். வீட்டு வரி வீட்டை விற்றால் கூட கட்டமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு மண் திருட்டு, கனிம வளங்கள் திருட்டு அதிகரித்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளம்பர மேனியா என்ற நோயால் பாதிக்கப்பட்டு விளம்பரத்திற்காக மட்டுமே நாள்தோறும் புகைப்படங்கள் எடுத்து முகநூலில் பதிவு செய்து வருகின்றனர்.

சென்னையில் வெள்ளத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் முதல்வர் மனைவியுடன் சென்று லவ்டுடே படம் பார்க்க 3 மணி நேரம் ஒதுக்குகிறார். ஆவின் நிர்வாகம் திவாலான நிறுவனம். ஒரு புறம் பால் விலை உயர்வால் மக்கள் பாதிப்பு. மறுபுறம் பால் கொள்முதல் விலையால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

சென்னையில் கொஞ்சமாக பெய்த மழைக்கு பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இனி வரும் டிசம்பர் மழைக்கு என்னவாகும் என்று தெரியவில்லை. விற்பனையாகாத பாலை காய்ச்சி வெண்ணையாக மாற்றி பொங்கலுக்கு பயன்படுத்திக் கொள்வோம் என அமைச்சர் நாசர் கூறி உள்ளார். தமிழக முதல்வர், நரேந்திர மோடியாக வேண்டுமானால் ஒருநாள் கூட விடுப்பு எடுக்கக்கூடாது. குடும்பத்தாரையும் உடன் வைத்து கொள்ளக்கூடாது.

அனைவரும் 16 மாதங்கள் மட்டும் காத்திருங்கள். தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வரும். தமிழகத்தில் இருந்து 26 எம்.பி.,க்கள் பார்லிமென்ட்டுக்குச் செல்வார்கள். கோவையில் நடந்த குண்டுவெடிப்பு அல்ல; கொலைவெறி தாக்குதல். 6 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தொடர்ந்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி விசாரைண செய்து வருகின்றனர் இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

41 − = 36