தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பு: கல்வித்துறை அமைச்சர் தகவல்!!!

தமிழகத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை திறப்பது குறித்து கல்வித்துறை சார்பில் வருகிற 15ம் தேதி தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சி மாநகராட்சி 61வது வார்டுக்கு உட்பட்ட திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் காவேரி நகர் பகுதியில் 2020 மற்றும் 21வது நிதி ஆண்டில் தனது தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.16 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக்கடையை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

அப்போது  பேசிய அவர்,  தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து நிலைப்பாட்டில் உள்ளதாக தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும் போது அனைத்துக் கட்சியினரும் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அவரது கோரிக்கைக்கு பா.ஜ.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் தமிழக அரசு நிச்சயம் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார். இன்று நடக்கும் நீட் தேர்வு தமிழகத்தில் கடைசி நீட் தேர்வாக இருக்குமா? என்ற நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, நீட் தேர்வு எதிர்த்து போராடுகிறோம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்போடு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை தமிழக முதல்வருக்கும் உள்ளது.

தமிழகத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை திறப்பது குறித்து 15ம் தேதி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். மேலும், பள்ளிக்கல்வித்துறை அறிக்கை தந்த பிறகு பள்ளிகள் திறப்பு பற்றி முதல்வர் முடிவெடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

54 + = 62