தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்புக்கு பள்ளிகள் திறப்பு குறித்து செப்-8ஆம் தேதி முடிவு -அமைச்சர் அன்பில் மகேஷ்

1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து செப்டம்பர் 8-க்கு பிறகு முடிவு செய்யப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த 1ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு, 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து செப்டம்பர் 8-க்கு பிறகு முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.