
தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் சில பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்தது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து சென்னை, மதுரை, திருவள்ளூர், விழுப்புரம், சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று காலையில் மழை பெய்தது.
இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக சென்னை உட்ளிட்ட 11 மாவட்டங்களில் 2 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், இன்றைய தினம் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, சேலம், சென்னை, செங்கல்பட்டு உட்பட 20 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யுமென்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.