தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளதால் மயிலாடுதுறையில் பல லட்சம் மதிப்பிலான மண் விநாயகர் சிலைகள் விற்பனை செய்ய முடியாமல் தேங்கி உள்ளதால் மண்பாண்ட தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளதாக தமிழ்நாடு திருக்கோயில் திருமடங்கள் பாதுகாப்பு பேரவை மாநில செயலாளர் மா.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சங்கரன்பந்தலில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- கொரோனா பெருந்தொற்று பரவல் ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடத்தவும் ஊர்வலம் செல்லவும் அரசு சார்பில் தடை விதிக்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை எதிர்பார்த்து தமிழகத்தின் பல பகுதிகளில் லட்சக்கணக்கான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை ஆகாமல் வீணானது. அதுமட்டமின்றி பல்வேறு நாட்டுப்புற கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் வாழ்வாதாரம் இழந்தனர்.

இந்நிலையில் இந்த ஆண்டாவது தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் நடத்த எதிர்பார்த்த நிலையில் இந்த ஆண்டும் அரசு தடை விதித்தது பெரும் ஏமாற்றத்தத்தை தந்துள்ளது.
மேலும் இரண்டு ஆண்டாக விநாயகர் சிலைகளை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள், நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளதால் அரசு கவணத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் முன்னிலையில் அரசு வழிகாட்டுதல்படி கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் நடத்த அனுமதிக்க வேண்டும் மறு பரிசீலனை செய்ய கோரிக்கை விடுத்துள்ளார்.
- வினாயகர் சிலைகள் தயாரிப்பு – மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் மற்றும் கொலு பொம்மைகள் தயாரிப்பில் மண்பாண்ட தொழிலாளர்கள் பாதிப்பு அடையாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தரங்கம்பாடி வட்டம் அரும்பாக்கம், மணக்குடி, கஞ்சாநகரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் விநாயகர் சிலைகளை 2 அடி முதல் 15 அடி வரை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையிலும், லட்சுமி, சரஸ்வதி, முருகன், துர்க்கை, காமதேனு, தசாவதாரம் செட்டு, அஷ்டலட்சுமிஹ உள்ளிட்ட கொலு பொம்மைகளை ரூ.50 முதல் 500 வரை விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த சிலைகள் அனைத்தும் காகித கூழ், கிழங்கு மாவு மற்றும் களிமண்ணால் தயாரித்து விற்பனை செய்பப்படுகிறது. இதனால் ஏராளமான பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா நோய் காரணமாக நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் கூட்டத்தை தவிர்க்க கோவில்கள், பொது நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளி கல்லூரி நடத்துவதற்கு அரசு தடை விதித்திருந்தது. தற்போது சில தளர்வுகளுடன் பள்ளிகள் இயங்குவதற்கு அரசு அனுமதித்துள்ளது.

இதனால் இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாடவும், கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் மற்றும் கொலு பொம்மைகள் வாங்க வியாபாரிகள் வராததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விநாயகர் சிலைகள் விற்பனை செய்வதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்குமாறு மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.