தமிழகத்தில் வரும் 10-ஆம் தேதி  1000  இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன்  அறிவிப்பு

தமிழகத்தில் வரும் 10-ஆம் தேதி 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடில் புதுவகை வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதித்த ஏராளமானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனைத் தொடர்ந்து காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வைரஸ் காய்ச்சல் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், கொரோனா போன்ற நோய் தொற்று அடிக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டில் புதுவகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் மாநிலம் முழுவதும் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு மருத்துவ முகாம் வருகிற 10-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.

இதில் சென்னையில் வார்டுக்கு ஒரு முகாம் வீதம் 200 வார்டுகளில் 200 முகாம்கள் நடத்தப்படும். பொதுமக்கள் இந்த முகாம்களுக்கு சென்று பயனடையலாம். காய்ச்சல், இருமல் இருப்பவர்களுக்கு பரிசோதித்து மருந்து மாத்திரைகள் வழங்கப்படும். பொதுவாக வைரஸ் தொற்று ஏற்படுவதால் கூட்டங்களுக்கு செல்வதை தவிர்த்தல், முக கவசம் அணிதல் போன்ற சுய கட்டுப்பாட்டு முறைகளை கடைப்பிடிப்பது நல்லது என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

88 + = 93