தமிழகத்தில் மேலும் 1,804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் மேலும் 1,804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் மேலும் 1,804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 25,92,436 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 1,917 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 25,37,632 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக 32 பேர் உயிரிழந்துள்ளதால், மொத்த பலி எண்ணிக்கை 34,579 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் தமிழகத்தில் 20,225 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.