தமிழகத்தில் முதல் முறையாக தஞ்சாவூரில் தேசிய அளவிலான தற்காப்பு கலை பயிற்சி முகாம்

மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி காலத்திய இந்த தற்காப்பு கலை அழிந்து விட்ட நிலையில் இக்கலையை மீட்டுருவாக்கும் வகையில் தஞ்சாவூரில் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு அஸ்தட் அக்காடா சங்கம் சார்பில் தமிழகத்தில் முதல் முறையாக பள்ளி மாணவர்களுக்கான தற்காப்பு கலை பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது. மூன்று நாட்கள் நடைபெறும் இம்முகாமில் தற்காப்பு கலை, தேசிய நடுவர் பயிற்சி ,மற்றும் கருப்பு பட்டை தேர்வு ஆகிய பயிற்சிகள் பள்ளி மாணவர்கள் மற்றும் வீரர்களுக்கு வழங்கப்படுகிறது.  

இந்த பயிற்சி முகாமில் கர்நாடகா கேரளா மற்றும் தமிழகத்தில் திருச்சி கோவை சென்னை மதுரை ஆகிய மாவட்டங்களிலிருந்து பள்ளி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தற்காப்பு கலைகளை கற்றனர், பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு கலை தற்போது அவசியமான ஒன்றாக  உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, இப்பயிற்சி முகாமில் சங்கத்தின் தேசிய பொது செயலாளர் ராஜேஷ் மாநில பொது செயலாளர் கேசவன் மாநிலத் தலைவர் தஞ்சை புவனேஸ்வரி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + = 16