தமிழகத்தில் புதிதாக 1,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று ஒரே நாளில் 1,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 25,67,401ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று 2,011 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், கொரோனா தொற்று பாதிப்பால் இன்று மட்டும் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றுடன் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 20,117ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.