
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,604 -ல் இருந்து 1,585 ஆக குறைந்துள்ளது. 27 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,842 பேர் குணமடைந்து உள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,50,911 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில்,1,585 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,04,074 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 4,12,10,376 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கோவிட் உறுதியானவர்களில் 913 பேர் ஆண்கள், 672 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 15,20,737 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 10,83,299 ஆகவும் அதிகரித்து உள்ளது. 1,842 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,50,710 ஆக உயர்ந்துள்ளது.
27 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 7 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 20 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,761 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 172 ஆக இருந்த நிலையில் இன்று (24ம் தேதி) 165 ஆக குறைந்துள்ளது.