தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சேலத்திலிருந்து சென்னைக்கு சைக்கிள் பேரணி துவக்கம்

தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சேலத்திலிருந்து சென்னைக்கு சைக்கிள் பேரணி துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கியவாறு இளைஞர்கள் பயணத்தை மேற்கொண்டனர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் நீண்ட நாள் கனவு திட்டமான பசுமைப் புரட்சி திட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், ஒவ்வொருவரும் ஐந்து மரக்கன்றுகளை நட வேண்டும் என்பதை நினைவுபடுத்தும் விதமாக மக்கள் தாய் பூமி என்ற அமைப்பில் உள்ள இளைஞர்கள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை மேற்கொண்டுள்ளனர்.

இன்று சேலம் அரசு கலைக்கல்லூரியில் தொடங்கிய இந்த சைக்கிள் பேரணியானது, சாரதா கல்லூரி சாலை வழியாக 5 ரோடு சென்று அங்கிருந்து சென்னை புறப்பட்டு சென்றனர். இந்தப் பயணத்தில் ஒவ்வொரு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கி அனைவரும் மரக்கன்றுகள் நட வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டு சைக்கிள் பேரணியை மேற்கொண்டுள்ளனர். இந்த சைக்கிள் பேரணியில் மருத்துவர்கள், கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.