தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் பற்றி முதலமைச்சர் இன்று ஆலோசனை

ஜூலை 9ஆம் தேதியுடன் தமிழகத்தில் ஊரடங்கு முடியும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழ்நாட்டில் 28 ஆம் தேதிக்குப் பிறகு கொரோனா தொற்று அதிகளவில் இருந்து வருகிறது. பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர தமிழகஅரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 9 இடங்களில் கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, திருப்பூர், நாகை, கோவை ஆகிய மாவட்டங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தலைமைச் செயலாளர், பொதுத்துறை செயலாளர், மருத்துவத்துறை செயலாளர், மற்றும் பொதுசுகாதாரத் துறை இயக்குநருடன் ஆலோசிக்க உள்ளார். தற்போது கொரோனா தொற்று அதிகரிப்பதால், கூடுதல் தளர்வுகளா, கூடுதல் கட்டுப்பாடுகளா என்பது ஆலோசனைக்குப்பின் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.