தமிழகத்தில் காலியாக இருக்கும் நுகர்வோர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமிக்கப்படுவது எப்போது அமைச்சர் ரகுபதி கவனம் செலுத்துவாரா?

தமிழக சட்டத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் காலியாக இருக்கும் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு  நீதிபதி நியமனம் செய்ய கோரிக்கை வலுத்து வருகின்றது.

தமிழ்நாடு முப்பத்தி எட்டு மாவட்டங்களை கொண்ட ஒரு மாநிலமாகும்.இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களுக்கு பல்வேறு வகையில் முன்னோடி மாநிலமாக இருந்து வருகின்றது. இந்த மாநிலத்தில் படிப்பறிவு நிலை கடந்து விழிப்புணர்வு சமூக சீர்திருத்தம் உள்ளிட்ட வகைகளிலும் தலை சிறந்து விளங்கி வருகின்றது. தற்பொழுது இந்த மாநிலத்தில் நுகர்வோர் நீதிமன்றங்களில் ஏராளமான மாவட்டங்களில் நீதிபதிகள் நியமனம் இல்லாமல் ஆங்காங்கே நுகர்வோரின் கோரிக்கைகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தமிழக சட்டத்துறை அமைச்சர் அனைத்து மாவட்டங்களிலும் இயங்கக்கூடிய நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு விரைந்தது நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்பது புதுகை வரலாறின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

அமைச்சர் எஸ்.ரகுபதி

நுகர்வோர் நீதிமன்றத்தில் நீதிபதி நியமனத்தில் இல்லாததால் என்னென்ன பாதிப்புகள் இருக்கின்றன என்பதை புதுக்கோட்டை  கோல்டன் நகரில் வசித்து வரும் அ.ஜனார்தனம் கூறுகையில்:

நுகர்வோருக்கான பல்வேறு பிரச்சினைகளைத் தீர்த்து வைத்திட ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் செயல்படும் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திற்கும்  ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி நியமிக்கப்படுகின்றார்.தற்ப்போது தமிழகத்தில் சுமார் ஐந்து மாவட்டங்களில் மட்டுமே நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. ஆனால் இதர  மாவட்டங்களில் நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமிக்கப்படாமல் ஆண்டுக் கணக்கில் காலியாக இருப்பதாக தெரியவருகிறது.

இதனால் ஓவ்வொரு நுகர்வோர் நீதிமன்றங்களிலும் ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையாக தேங்கி  உள்ளன.  இதனால் நீதி கேட்டு வழக்கு தொடர்ந்த நுகர்வோருக்கு உரிய காலத்தில் தீர்வு கிடைக்க  இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக சட்ட அமைச்சராக உள்ள எஸ்.ரகுபதியின் சொந்த மாவட்டமான புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் பிப்ரவரி 2020 முதல் நீதிபதி பதவி காலியாக உள்ளது. இதனால் சுமார் இரு 300 வழக்குகளுக்கு மேலான நுகர்வோர் தங்களுக்கான தீர்வை எதிர்பார்த்து சுமார் இரண்டாண்டுகளாகக் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். அப்படியெனில் ஒரு மாவட்டத்திற்கு சராசரியாக 300 வழக்குகள் தீர்வுக்காக காத்திருக்கின்றன என்றால் தமிழகம் முழுவதும் எத்தனை ஆயிரம் வழக்குகள் தீர்வுக்காக காத்திருக்கும் எத்தனை நுகர்வோர் நியாயத்திற்காக ஏங்கிக் கொண்டிருப்பார்கள்.

அ.ஜனார்தனம்

எனவே சட்ட அமைச்சர் அவர்கள் தனது சொந்த மாவட்டத்தி காலியாக உள்ள நுகர்வோர் நீதிமன்றத்திற்கான நீதிபதியை  நியமித்திட விரைவு நடவடிக்கை மேற்கொள்ளவார் என வழக்கு தொடர்ந்த அனைத்து  நுகர்வோரும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். நீதிபதி நியமனத்தில் இல்லாததால் இரண்டு ஆண்டுகளாக வாய்தா வாய்தா வாகவே அழையவேண்டிய நிலை வழக்கு தொடர்ந்தவர்களுக்கு ஏற்பட்டுள்ளது இதனால் மிகப்பெரிய மன உளைச்சலுக்கு அவர்கள் ஆளாகி வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 2