தமிழகத்தில் ஒரே ஆண்டில், 23 ஆயிரத்து 976 பேட்டரி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, போக்குவரத்து துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் புகை மற்றும் மாசு இல்லாத சுற்றுப்புற சூழலை உருவாக்கும் வகையில், மின்சார வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மார்ச் முதல் அடுத்த ஆண்டு டிசம்பர் வரை மின்சார வாகனங்கள் வாங்குவோருக்கு, முழுமையான மோட்டார் வாகன வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
இதனால், கடந்தாண்டு மட்டும் 3,010 போக்குவரத்து வாகனங்கள் 8,927 போக்குவரத்து அல்லாத வாகனங்கள் புதிதாக வாங்கப்பட்டுள்ளன.அதேபோல், மின்சாரம் மற்றும் பெட்ரோலில் இயங்கும் வகையிலான, 12 ஆயிரத்து, 39 வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தாண்டு மின்சார வாகனங்கள் வாங்குவோரின் எண்ணிக்கை, கடந்தாண்டைவிட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவல் போக்குவரத்து துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.