தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் வழக்கமான பொருட்களை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம்

ரேஷன் கடைகளில் இன்று புதன்கிழமை முதல் பொங்கல் பரிசு தொகுப்புடன், இம்மாதத்திற்கான வழக்கமான அத்தியாவசிய பொருட்களையும் சேர்த்து வினியோகம் செய்யுமாறு, மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, உணவு வழங்கல் துறை ஆணையர், மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அரிசி கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அறிவுரை வழங்கப்பட்டது. இம்மாதம் 10ம் தேதி வரை சில மாவட்டங்களில் 87 சதவீதமும்; ஒட்டுமொத்தமாக 65.3 சதவீதமும் பொங்கல் பரிசு வினியோகம் மேற் கொள்ளப்பட்டு உள்ளது.

அனைத்து ரேஷன் கடைகளிலும், பொங்கல் பரிசு தொகுப்புடன் இம்மாதத்திற்கான பொருட்களை, இன்று முதல் வினியோகம் செய்ய வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதோ அல்லது பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதோ மறுக்கப்படாமல், அனைத்து அரிசி கார்டுதாரர்களுக்கும் தொடர்ந்து வினியோகம் செய்ய வேண்டும். இதில் புகார்களுக்கு இடம் அளிக்காமல் உரிய கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

59 − 52 =