தமிழகத்தில் இன்று முதல் பிளஸ் டூ துணைத் தேர்வுகள்

தமிழகத்தில் பிளஸ் டூ துணைத் தேர்வு இன்று முதல் நடைபெறவுள்ளது.

பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மதிப்பெண் பட்டியல் கடந்த 19ஆம் தேதி வெளியாகியுள்ளன இதில் குறைவான மதிப்பெண் கிடைத்துள்ளதாக கருதி துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்த 12ஆம் வகுப்பு மாணவர்களும் ஏற்கனவே தேர்வெழுத விண்ணப்பித்திருந்த மாணவர்களும் தனித்தேர்வர்களுக்கும் இன்று முதல் 19ஆம் தேதி வரை துணைத் தேர்வு நடைபெறும்.

அதன்படி பிளஸ் டூ தேர்வு முடிவில் திருப்தி இல்லாத 25 மாணவர்களும், 45 ஆயிரத்திற்கும் அதிகமான தனித்தேர்வர்களும் தேர்வு எழுதுகின்றனர்.