தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு:வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் 3நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் தெரிவித்துள்ள அறிக்கையில், வடதமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியால் 9 மாவட்டங்களில் இன்று கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி உள்ளிட்ட  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செப்.4, வடதமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியால் 12 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூர் , நாமக்கல், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது.

செப்.5, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம்,தருமபுரி, கரூர் , நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருச்சி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

செப்.6, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருப்பத்தூர், தென்காசி, மதுரை, திருச்சி, வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

சென்னையில் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இன்று வடகேரளா, லட்சத்தீவு, தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல், கர்நாடக கரையோரம் பலத்த சூறாவளி வீசக்கூடும். செப்.4,5,6 ஆகிய தேதிகளில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்தமிழக கரையோரம், தென்மேற்கு வங்கக்கடலில் சூறாவளி வீச வாய்ப்புள்ளது. மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி வீசவுள்ளதால் மீனவர்களுக்கு 5 நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

76 − 67 =