தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவையில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

தமிழகம், காரைக்கால் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இன்று முதல் வரும் 16ம் தேதி வரை மிதமான மழை பெய்யும். தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

91 − = 86