மாநிலத்தில் அரசியல், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு வரும் அக்.,31 ம் தேதி வரையில் தடை நீ்ட்டிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் நேற்று தெரிவித்து உள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் மற்றும் கோவிட் தொற்றின் மூன்றாம் அலையை தமிழகத்தில் தடுக்கும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதம் 31 ம் தேதி வரையில் திருவிழா, அரசியல் சமூகம் மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்துவற்கு தடை நீட்டிக்கப்படுகிறது.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் :
பொதுமக்கள் பண்டிகைகளை தங்கள் வீட்டிலேயே கொண்டாட வேண்டும்,பொது போக்குவரத்தை அவசியத்திற்காக மட்டுமே பொது மக்கள் பயன்படுத்த வேண்டும்,கூட்டம் கூடும் இடங்களுக்கோ நிகழ்ச்சிகளுக்கோ பொதுமக்கள் செல்வதை மக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்,செப்.,அக்., மாதங்களில் கோவிட் மூன்றாம் அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக மத்தியஅரசின் உள்துறை சார்பில் சிறப்பு குழு அறிக்கை அளித்து உள்ளது,பள்ளி கல்லூரி வளாகங்களில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்,மக்களின் வாழ்வாதாரம் , பொருளாதார நலன் கருத்தில் கொண்டு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகள் தொடரந்து செயல்படும்.இருப்பினும் திருவிழா, அரசியல் சமூகம் மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்துவற்கு தடை நீட்டிக்கப்படுகிறது,கேரளாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கோவிட் தொற்று,நிபா வைரஸ் காரணமாக அம் மாநிலத்திற்கு பொது பேருந்து போக்குவரத்திற்கு தடை விதிக்கப்படுகிறது.
விடுதலைக்காக தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்க அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு மட்டுமே அனுமதி. அது மட்டுமல்லாது மரியாதை செய்யப்படும் தலைவர்களின் குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு மட்டுமே அனுமதி. வழங்கப்படுகிறது.
புகழ்பெற்ற அரசியல் கட்சி தலைவர்கள், ஐந்து நபர்களுக்கு மிகாமல் மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற்று மாலை அணிவிக்கலாம்.
கோவிட் மூன்றாவது அலையை தடுப்பதற்கு தடுப்பூசிபங்கு முக்கியமானது தமிழகத்தில் 45 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் , 12 சதவீதம் பேருக்கு 2 வது டோஸ் ஊசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.