மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் 25 செ.மீ. மழை பெய்துள்ளது. அடுத்ததாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் மின்னல், பனப்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 20 செ.மீட்டரும், காஞ்சிபுரத்தில் 19 செ.மீ., செய்யாறு-18 செ.மீ., ஆவடி-17 செ.மீ., திருத்தணி, கே.வி.கே. காட்டுக்குப்பம் தலா 16 செ.மீ. மழை பெய்துள்ளது. சென்னை அயனாவரம் தாலுகா அலுவலகம், குன்றத்தூர் தலா 15 செ.மீ., அரக்கோனம், உத்திரமேரூர், பெரம்பூர் (சென்னை)- தலா 14 செ.மீ., கும்மிடிப்பூண்டி, தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், மகாபலிபுரம், சோழவரம், பள்ளிப்பட்டு, எம்.ஜி.ஆர். நகர் (சென்னை), ஆலந்தூர், ஊத்துக்கோட்டை தலா 13 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. அம்பத்தூர், செங்குன்றம், செங்கல்பட்டு, கொரட்டூர், சென்னை விமான நிலையம் தலா-12 செ.மீ., திருவள்ளூர், பொன்னேரி, நுங்கம்பாக்கம், பூந்தமல்லி, தண்டையார்பேட்டை, காவேரிப்பாக்கம், போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம், மதுராந்தகம், செம்பரம்பாக்கம், பூண்டி தலா 11 செ.மீ., மீனம்பாக்கம், திருத்தணி, புழல், அண்ணா பல்கலைக்கழகம், தாமரைபாக்கம், சின்னகலர் தலா 10 செ.மீ. மழை பெய்துள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.