
தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் தற்போதைய கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தின் பதவிக் காலம் 2022 அக்டோபரில் முடிகிறது. இவரை மாற்றி விட்டு புதிய கவர்னர் நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகி வந்தன.
இந்நிலையில் தமிழக கவர்னராக நாகாலாந்து கவர்னராக இருந்த ஆர்.என். ரவியை நியமித்து இன்று (செப்.09) ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போதைய கவர்னராக உள்ள பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் கவர்னராக கூடுதல் பொறுப்பு வகித்த நிலையில் முழுநேர கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என். ரவி, 1976 ஆண்டு ஐ.பி.எஸ்.கேடர் ஆவார். காவல்துறையில் , மற்றும் உளவுத்துறை ஆகியவற்றில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். இதற்கு முன் நாகாலாந்து கவர்னராகவும் பணியற்றியுள்ளார்.