தனியார் பள்ளி மாணவன் விவகாரம்: அரசு மருத்துவமனையை கண்டித்து காரைக்காலில் முழு அடைப்பு போராட்டம்

அரசு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து காரைக்காலில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

காரைக்காலில் தனியார் பள்ளி மாணவன், சக மாணவியின் தாயாரால் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அரசு மருத்துவமனையில் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இதனால் அரசு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து காரைக்காலில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

புதுச்சேரி யூனியன் பிரேதம் காரைக்காலில் இருக்க கூடிய அரசு மருத்துவமமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்ற குற்றசாட்டு தொடர்ச்சியாக வைக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கடந்த 2-ம் தேதி காரைக்கால் மாவட்டம் நேரு நகர் பகுதியை சேர்ந்த பால மணிகண்டம் என்ற 8-ம் வகுப்பு மாணவனை, அவருடன் படிக்கும் சக மாணவியின் தாயார் குளிர்பானத்தில் விஷம் வைத்து கொலை செய்ய முயற்சித்தார்.

இதனை தொடர்ந்து காரைக்கால் அரசு மருத்துவமனையில் அந்த மாணவன் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படாமல் மறுநாள் நள்ளிரவில் அந்த மாணவன் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காரைக்கால் மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி வர்த்தகர்கள், அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் என அனைவரும் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காரைக்கால் சமூக போராளிகள் என்ற வாட்ஸ் ஆப் குழுவினர் இந்த போராட்டத்திற் முன்னெடுத்தனர். இந்தனை தொடர்ந்து இன்று காரைக்கால் மாவட்டம் முழுவதும் முழு அடைப்பு போராட்டமானது கடைபிடிக்கப்படுக்கிறது. காரைக்கால் மாவட்டத்தை பொறுத்தவரையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

96 − = 88