மாணவர் சேர்க்கை கூடுதல் இடங்கள் ஓதுக்க வேண்டி புதுக்கோட்டை மாவட்ட தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் ஓருங்கிணைப்பாளர் ரமணன் அறிக்கை விடுத்துள்ளார். க ட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளின் கல்வி பயிலும் மாணவர் சேர்க்கையில் 25 சதவிதம் இடங்களை இலவசமாக பள்ளி நிறுவனங்கள் ஒதுக்கீடு செய்து வருகின்றனர் .இவ்வகை மாணவர்களுக்கு தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்துகல்விகட்டணத்தை பள்ளிகளுக்கு வழங்கி வருகிறது. சமுதாயத்தில் நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் உள்ள பெற்றோர்களின் குழந்தைகளும் தனியார் பள்ளிகளில் கல்வி பயில விரும்பும் போது அவர்களுக்கு வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி கொடுத்து வருகிறது, பள்ளியிலிருந்து சுமார் 1கிலோமீட்டர் தொலைவுக்குள் இருப்பிடம் உள்ள மாணவர்களுக்கு இவ்வாய்ப்பு வழங்க பட்டு வருகிறது .
கடந்த கல்வி ஆண்டுகளில் ஓவ்வொரு பள்ளிக்கும் குறைந்த பட்ச சேர்க்கை ஓதுக்கீடு இடங்கள் எட்டு ஆகும். தற்போது இக்கல்வி ஆண்டில் இவ்வகை நடைமுறை மாற்றப்பட்டு குறைந்த பட்சம் இடம் ஒன்றாக குறைக்கப்பட்டுள்ளது. இது பெற்றோர்கள் மற்றும் தாளாளர்கள் மத்தியில் பெறும் அதிர்ச்சிபை உண்டாக்கி இருக்கிறது . சென்ற கல்வி ஆண்டை விட சுமார் ஐம்பதாயிரம் இடங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
இக்கல்வி ஆண்டில் சுமார் 80000 மாணவர்களுக்கு மட்டுமே இடங்களை ஓதுக்க அரசு முடிவு செய்துள்ளது ஆனால் பெற்றோர்கள் 135000 பேர் தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகள் பயில ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். ஓதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு கூடுதலாக பெற்றோர்கள் விண்ணப்பம் செய்து இருந்தால் அவ்வகை மாணவர்கள் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்நிலையில் தேர்வு செய்ய இயலாத மாணவர்களுக்கு இது மிக பெரிய ஏமாற்றமாக இருக்கும். கல்வி கனவு பறிபோகும்.
பள்ளி தாளாளர்களை பொறுத்தவரை இலவச சேர்க்கை இடங்களில் சேரும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசு ஓவ்வொரு ஆண்டும் அக்கல்வி ஆண்டு முடிவதற்குள் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். தற்போது பள்ளி சீருடை மற்றும் புத்தக செலவை இவ்வகை மாணவர்களுக்கு அரசே ஏற்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. அனைத்து சூழலையும் கருத்தில் கொண்டு அரசு இதில் சிறப்பு கவனம் செலுத்தி கூடுதல் இடங்களை ஏற்படுத்த வேண்டும். .இதனையே சமுக ஆர்வலர்கள் கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களும் வலியுறுத்தி வருகின்றார்கள். மாணவர்கள் எதிர் கால நலன்கருதி உடனே அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.