தஞ்சை மாநகரில் டிஎன்டிஜே சார்பில் இரத்த தான முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை மாநகர கிளை சார்பில் தவ்ஹீத் பள்ளிவாசலில் இரத்த தான முகாம் நடைபெற்றது.

இதில் மாவட்ட தலைவர் அதிரை ராஜிக் தலைமை வகித்தார், மாவட்ட செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் மாவட்ட பொருளாளர் அப்துல் ஹமீது மாவட்ட துணைச் செயலாளர் ஆவணம் ரியாஸ், அப்துல்லாஹ்,இத்ரீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிலையில் நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் கலந்துகொண்டு மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று உடல் தகுதி அடிப்படையில் 42 யூனிட் இரத்தம் தானமாக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரிக்கு மாவட்ட மருத்துவரணிச் செயலாளர் அரபாத் வழங்கினார். கலந்துகொண்ட 70 நபருக்கு மரக்கன்றுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

இந்நிகழ்சியை கிளை நிர்வாகிகள் அப்துல்லாஹ், ஜியாவுதீன்,சலீம்,சர்தார்,ஹாலீத் மற்றும் முஸ்தபா ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

65 − 56 =