தஞ்சை பாரத் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா

தஞ்சை பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரியின் 2022 – 2023 ஆண்டிற்கான முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது.  இதில் பாரத் கல்லூரி முதல்வர் க.குமார் முன்னதாக அனைவரையும் வரவேற்று பேசினார்.  கல்லூரி இயக்குநர் த. வீராசாமி முன்னிலை உரையாற்றினார். இத்துவக்க விழாவிற்கு பாரத் கல்விக் குழுமங்களின் செயலாளர் புனிதா கணேசன் தலைமை தாங்கி உரையாற்றினார்.  அவ்வப்போது மாணவர்கள் கல்வி சார்ந்து மட்டுமல்லாது கலைசார்ந்தும் இருக்கவேண்டும் என்றும் இளைய சமுதாய மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் நாட்டை இன்னும் சிறப்பாக வழிநடத்த வேண்டும் என்றும் கூறினார்.

இத்துவக்க விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக நாட்டுப்புற பாடகர் சின்னப்பொண்ணு கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார். நிறைவாக துணை முதல்வர் இரா. அறவாழி நன்றியுரை கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + 1 =