தஞ்சை அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தில் உள்ள 88 கோயில் பராமரிப்புக்கு மானியம் வழங்கினார் முதல் அமைச்சர்

தேவஸ்தான நிர்வாகத்திலுள்ள 88 திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக காசோலையை முதல் அமைச்சர் வழங்கினார்.

2022 – 2023 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கையில், “தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தில் உள்ள 88 திருக்கோயில்களில் பெரும்பாலானவற்றில் போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையில் 3 கோடி ரூபாய் அரசு மானியம் ஆண்டுதோறும் வழங்கப்படும்” என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிருவாகத்திலுள்ள 88 திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக அரசு மானியமாக 3 கோடி ரூபாய்க்கான காசோலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே வழங்கினார், இந்த விழாவில் அமைச்சர் சேகர்பாபு, தலைமை செயலர் இறையன்பு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

22 − 12 =