தஞ்சையில் பெட்ரோல் ,டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மாநில அரசை கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மாநில அரசை கண்டித்து பா.ஜ.க. மாநில இளைஞரணி செயலாளர் கதிரவன் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.      

தஞ்சை ரயிலடி அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞரணி செயலாளர் கதிரவன் தலைமை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தை தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பண்ணவயல் இளங்கோ தொடங்கிவைத்தார்.

ஆர்பாட்டத்தில், மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர்கள் அருண், செந்தில்நாதன். வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ஹரிகேஸ் . தெற்கு மாவட்ட பா.ஜ.க. பொதுச் செயலாளர்கள். ஜெய்சதீஷ், மதி துரைமுருகன், பஞ்சாட்சரம். வடக்கு மாவட்ட செயலாளர்கள்,  தெற்கு மாவட்ட செயலாளர் விக்னேஷ் குமார் ராஜா, தங்க. கென்னடி, முரளி,  மாவட்ட மகளிரணி தலைவி பூமி செல்வி, மாவட்ட துணைத் தலைவர்கள் ஜீவஜோதி, லெட்சுமி, மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ராஜேஸ்வரன் மற்றும் பா.ஜ.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

36 − = 27