தஞ்சாவூர் மாவட்டத்தில் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டினை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார் 

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தாலுக்கா, வில்வராயன்பட்டியை சேர்ந்த செபாஸ்டின் என்ற கூலித் தொழிலாளி வீடு கட்டும் பணியில் பணி செய்து கொண்டிருந்த பொழுது மண் சரிந்து விழுந்து உயிருக்கு போராடி மிகவும் பாதிக்கப்பட்டு தன்னுடைய அன்றாட காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியாமலும் நடக்க முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டார். இந்நிலையில்  மண் சுவரினால் கட்டப்பட்டிருந்த இவர்களது வீடு மழையினால் சேதமடைந்து இடிந்து விழுந்து குடியிருக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு மிகுந்த அவதிப்பட்டனர்.

இதேபோல் வடக்கூர்  கிராமத்தில் செல்லம்மாள் என்ற ஆதரவற்றோர் கஜா புயலினால் வீடு பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வந்தார்.  இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டி தர திட்டமிட்டார். மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோளின் படி தஞ்சாவூர் மதர் தெரசா பவுண்டேஷன் மற்றும் யாகப்பா கல்வி நிறுவனங்களின் உதவியுடன்  ரூபாய் 11 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு வீடுகளை  மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மதர் தெரசா பவுண்டேஷன் சேர்மன் சவரிமுத்து தலைமை தாங்கினார். அறங்காவலர்கள் சம்பத், ராகவன், கோவிந்தராஜ், முரளி, கிருஷ்ணன் தகவல் துறை அலுவலர் ஜார்ஜ், திட்ட இயக்குனர் ரத்தீஷ் குமார், நிர்வாக மேலாளர் மெர்சி, தளவாட மேலாளர் ஜெரோம், மக்கள் தொடர்பு அலுவலர்கள் நாகராணி, விஜி மற்றும் தன்னார்வ தொண்டர்கள் வினோதினி,  கிறிஸ்டி, மகேஸ்வரன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 65 = 72