தஞ்சாவூர் மாநகராட்சியில் 103 திட்டப்பணிகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது –தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் தகவல்

தஞ்சாவூர் மாநகராட்சியில் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் ரூ.966.62 கோடி மதிப்பீட்டில் 103 திட்டப்பணிகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது- தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் தகவல் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தஞ்சாவூர் மாநகராட்சியில் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் மேற்க்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்  தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் தலைமையேற்று பேசியதாவது,

தஞ்சாவூர் மாநகராட்சியில் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தண்ணீர் விநியோகம், போக்குவரத்து நிறைந்த பகுதிகளில் தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பது குறித்தும், பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகள் தஞ்சாவூர் மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூபாய் 966.62 கோடி மதிப்பீட்டில் 103 வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது, மேலும் நிலுவையில் உள்ள அனைத்து திட்டப் பணிகளையும் மக்கள் பயன்பாட்டிற்கு விரைவாக தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரயிடப்பட்டுள்ளது  என்றும் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் பேசினார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார், மாநகராட்சி துணைமேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் மாநகராட்சி உதவி பொறியாளர்கள் அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

70 + = 79