தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உரிமம் இல்லாமல் காரில் கொண்டுவரப்பட்ட துப்பாக்கி, 150 தோட்டாக்கள் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
நேற்று இரவு திருவிடைமருதூர் அருகே 5 தலைப்பு வாய்க்கால் என்ற இடத்தில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதுரையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி பயணித்த காரை வழிமறித்து சோதனை செய்தனர். அதில் காரில் உரிமம் இல்லாமல் துப்பாக்கி, 150 தோட்டாக்கள், இரண்டு கிலோ பால்ரஸ், இரண்டரை கிலோ வெடிமருந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவற்றை பறிமுதல் செய்த போலீசார் காரையும் கைப்பற்றினர். மேலும் காரில் இருந்த எட்வின் லியோ, பாலகுரு, அப்துல் காதர் ஆகிய மூவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.