தஞ்சாவூர் சரபோஜி மார்க்கெட்டில் தானியங்கி நாப்கின் எரிக்கும்  இயந்திரத்தை துணை மேயர் அஞ்சுகம் தொடங்கி வைத்தார்

தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான சரபோஜி மார்கெட் இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன, இதில் கடைகளில் மகளிர் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு அங்கு பணிபுரியும் மகளிருக்கு சுகாதார வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மாநகராட்சி சார்பில் அங்கு உள்ள மகளிர் கழிப்பிடத்தில் மகளிர் பயன்பாட்டிற்காக, சுகாதார வசதிக்காக தானியங்கி நாப்கின் எரிக்கும் இயந்திரத்தினை மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் தொடங்கி வைத்து, அதன் பயன்களை மகளிர்க்கு விளக்கி கூறினார், இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் காந்திமதி, உஷா மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார், மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + = 25