தஞ்சாவூரில் இன்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கேட்டரிங் டெக்னாலஜி அண்ட் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி தொடங்கப்பட்டு வெற்றிகரமாக 30 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் விதமாக பாரத் கல்விக் குழும மாணவர்களுக்கு இது ஒரு மாபெரும் சமையல் கலைஞருக்கான தேடல் என்ற தலைப்பில் சமையல் போட்டிகள் நடைபெற்றது.இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பாரத் கல்விக் குழும செயலாளர் புனிதா கணேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். போட்டியின் நடுவர்களாக இண்டியன் இன்ஸ்டிடியூட் முன்னாள் மாணவர்கள் கரிகாலன் மற்றும் ரங்கசாமி ஆகியோர் கலந்த கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை தேர்வு செய்தார்கள்.
ஒருங்கிணைப்பாளர் செஃப் விஜய் ஆனந்தராஜ் போட்டியினை நன்முறையில் வழி நடத்தினார். விழாவில் இன்டியன் இன்ஸ்டிடியூட் முதல்வர் முத்துக்கிருஷ்ணன், துணை முதல்வர் கவிதா, நிர்வாக அலுவலர் அன்பழகன், பாரத் கல்லூரி இயக்குனர் வீராசாமி மற்றும் முதல்வர் குமார், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கும் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.