தஞ்சாவூரில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக இபிஎஸ் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூரில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக இபிஎஸ் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சை ரயிலடி முன்பு நடைபெற்றது.  இந்த போராட்டத்தில் அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார், அப்போது திமுக அரசு ஆட்சிக்கு வந்து 15 மாதங்களுக்கும் மேல் ஆகி உள்ளது 15 மாதத்திற்குள் என்ன திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது, எதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று  வெள்ளை அறிக்கை கொடுக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார். மேலும் அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்கவும் முடியாது ஒழிக்கவும் முடியாது திமுக அதிமுகவிற்கு எதிரி, அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் துரோகிகள் அது எந்த வகையில் நியாயம் என்றும் ஆளுங்கட்சிக்கு துணை போகி அதிமுகவை அழிக்க நினைக்கிறார்கள் அதனால்தான் அவர்கள் தனி மரமாக  இருக்கிறார்கள், அதனால் தான் தனித்து விடப்பட்டுவிட்டார்கள் என்று பேசினார்

பின்னர் அளித்த பேட்டியில்  தொண்டர்கள் அனைவரையும் ஒன்றிணைந்து கட்சி அலுவலகம் செல்வேன் என சசிகலா கூறியது குறித்த கேள்விக்கு  யூகங்களுக்கெல்லாம் பதில் கூற முடியாது. அதிமுகவின் ஒருங்கிணைந்த தலைவர் எடப்பாடி தான், எடப்பாடி தலைமையில் தான் அதிமுக உள்ளது,  என்றும் மேலும்  சசிகலா  வைத்திலிங்கம் சந்திப்பு குறித்த கேள்விக்கு அவர்கள் எதார்த்தமான சந்திப்பு என்று கூறுகிறார்கள்.

ஆனால் இது திட்டமிட்டு நடைபெற்ற ஒன்று, அதிமுகவை வளம் பெற செய்யவும், பலம் பெற செய்யவும், அதிமுகவால் பலன் அடைந்தவர்கள் நினைக்க வேண்டும், ஆனால் அதை விட்டுவிட்டு திமுகவுக்கு துணை போகிற வேலையில் ஈடுபடுவது போன்ற வேலைகள் எல்லாம், அதிமுகவை அழிக்கும் வேலையாக தான் இருக்கும் என அவர் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அவைத்தலைவர் திருஞானசம்பந்தம், முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், ஆவின் தலைவர் காந்தி ,மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திருஞானம் மற்றும் கவுன்சிலர் கோபால், நிர்வாகிகள் ராஜமாணிக்கம், மெடிக்கல் சரவணன், புண்ணியமூர்த்தி, கவுன்சிலர்கள் தெட்சிணாமூர்த்தி, காந்திமதி  உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

31 − = 21