தஞ்சாவூரில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு  விழிப்புணர்வு மாரத்தான்

தஞ்சாவூரில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் அமைச்சர்கள் சுப்ரமணியன் மற்றும் அன்பில் மகேஷ் பங்கேறனர்.

தஞ்சையை அடுத்த வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் சார்பில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு  விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்ரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் அன்புராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு போட்டியினை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்தப் போட்டி  5 கிலோ மீட்டர்,  10 கிலோ மீட்டர், 20 கிலோ மீட்டர் தூரம் என நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. இந்த போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். மேலும்  20 கிலோமீட்டர் பிரிவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மேயர் ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டு ஓடினார்கள். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் டிகேஜி.நீலமேகம், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, பல்கலைக்கழக துணைவேந்தர் வேலுச்சாமி, பதிவாளர் ஸ்ரீவித்யா, தஞ்சாவூர் தடகள சங்க செயலாளர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

96 − = 88