தஞ்சாவூரில் இபிஎஸ் ஆதரவு அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் – பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட தீர்மானம்

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா வரும் 15ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ள நிலையில்  முன்னாள் முதல்வரும் அதிமுக தற்காலிக பொதுச்செயலாளருமான இபிஎஸ் அணி ஆதரவாளர்களின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது.

மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திருஞானம் தலைமையில் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் ஆவின் தலைவர் காந்தி முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது, அதில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது எனவும் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் வகையில் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது எனவும் தீர்மானம் செய்யப்பட்டது, இக்கூட்டத்தில் கவுன்சிலர் கோபால், அதிமுக நிர்வாகிகள் ராஜமாணிக்கம், மெடிக்கல் சரவணன், புண்ணியமூர்த்தி, கவுன்சிலர் தெட்சிணாமூர்த்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

27 − 18 =