தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில், இன்று அதன் விலை சற்று அதிகரித்திருப்பது இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் விலையேற்றம் இருந்தது. ஆனால், வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக கடந்த ஒரு வாரத்தில் தொடர்ச்சியாக தங்கம் விலை குறைக்கப்பட்டது. ஆனால் இன்று தங்கம் விலை திடீரென உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் பின்வருமாறு.,
சென்னையில் இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,466 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 4,434 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 35,472 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 256 ரூபாய் விலை உயர்ந்து 35,728 ரூபாய்க்கு விற்பனையாகிறது.வெள்ளியின் விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.67.40 ஆக இருந்தது. இன்று அது ரூ.67.70 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 67,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.