தக்காளி வரத்து அதிகரிப்பு மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்

வரத்து தொடர்ந்து அதிகரிப்பால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்து ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.14-க்கு விற்பனையாகிறது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், பழநி, வடமதுரை, அய்யலூர், சாணார்பட்டி, கோபால்பட்டி பகுதிகளில் அதிகளவில் தக்காளி பயிரிடப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு முன் நடவு செய்யப்பட்ட தக்காளி பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராகியுள்ளன. இதனால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு கடந்த சில நாட்களாக வரத்து அதிகரித்து வருகிறது.

இங்கிருந்து மதுரை, திண்டுக்கல், திருச்சி, புதுகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளாவிற்கும் அதிகளவில் விற்பனைக்கு செல்கிறது. இருப்பினும் கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.30 வரை விற்ற நிலையில் தற்போது விலை வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.14 வரை விற்பனையாகிறது. இதனால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.தக்காளி பயிரிட்ட விவசாயிகள் விலை குறைவால் விரக்தியடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

95 − = 89