“டோனி போலோ” புதிய பசுமை விமான நிலையம்: பிரதமர் மோடி திறந்து வைப்பு

அருணாச்சல் பிரதேசம் மாநிலம் இட்டா நகரில் “டோனி போலோ” என்கிற புதிய பசுமை விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

அருணாச்சல பிரதேசத்தின் தலைநகருக்கு அருகிலுள்ள ஹோலோங்கி பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி புதிய பசுமை விமான நிலையத்திற்கான அடிக்கல் நாட்டினார். இதன் பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், பிரதமர் மோடி இன்று (நவ.19) “டோனி போலோ” புதிய பசுமை விமான நிலையத்தை தொடங்கி வைத்தார்.

இந்த விமான நிலைய சேவை வடகிழக்கு மாநிலத்தின் தலைநகரை இணைக்கும் வகையில் உள்ளது. இது மாநில எல்லை மற்றும் மற்ற இந்திய நகரங்களுடன் வணிக விமானங்கள் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் பிற பகுதிகளுடன் ஹெலிகாப்டர் சேவைகள் மூலம் இணைக்கும். இந்த விமான சேவை மூலம் பிராந்தியத்தில் இருந்து சுமார் 20 லட்சம் பேர் பயனடைவார்கள் என்றும்,  இணைப்பு, வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்த உதவும் என்றும் அருணாச்சல பிரதேச உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

50 − = 46