டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டனில் வெண்கலம் பதக்கம் வென்று இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாதனை படைத்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி சிந்து தைவான் நாட்டைச் சேர்ந்த டாய் சூ யிங்கை எதிர்த்து விளையாடினார். இந்த போட்டியில் பி.வி. சிந்து 21-18, 21-12 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் சீனாவின் ஹி பிங்யாஜிவோவை பி.வி. சிந்து எதிர்கொண்டார். இந்த போட்டியில் பி.வி. சிந்து 21-13, 21-15 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை வென்றார். இதன் மூலம் 2 ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.