
இந்திய வீரர் பஜ்ரங் புனியா மல்யுத்த போட்டியில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியில் இன்று காலை 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா, ஈரானிய வீரர் மோர்டஸாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கிர்கிஸ்தான் நாட்டு வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், தற்போது அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.