டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் கோல்ப் விளையாட்டில் பங்கேற்றுள்ள இந்திய வீராங்கனை அதிதி அசோக்குக்கு பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ள நிலையில் கோல்ப் பெண்கள் தனிநபரில் மொத்தம் 4 சுற்றுகள் நடைபெறும். இதில் 3-வது சுற்று நிறைவில் அதிதி அசோக் 201 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறார். அமெரிக்காவின் நெல்லி கோர்டா (198 புள்ளி) முதலிடம் வகிக்கிறார். 203 புள்ளிகளுடன் 4 வீராங்கனைகள் 3-வது இடத்தில் உள்ளனர். மற்றொரு இந்திய வீராங்கனை தீக்ஷா தாகர் 220 புள்ளிகளுடன் 51-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளார்.
குறைவான புள்ளிகள் எடுப்பவரே கோல்ப் விளையாடில் வெற்றி பெற்றவர் ஆவார். புல்வெளி மைதானத்தில் நீண்ட தூரத்தில் இருந்து பந்தை அடிக்கும் போது ஒரே ஷாட்டில் பந்து இலக்குக்குரிய குழியில் விழுந்து விட்டால் குறைவான புள்ளி வழங்கப்படும். பந்தை குழியில் செலுத்துவதற்கு அதிகமான ஷாட் எடுத்துக் கொண்டால் அதிக புள்ளி கிடைக்கும். இதன்அடிப்படையில் கோல்ப் விளையாடில் புள்ளி முறை கணக்கிடப்படுகிறது.
இன்று காலை 4-வது சுற்று போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்தியாவின் அதிதி பங்கேற்றுள்ள கோல்ப் போட்டி மழையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்திய வீராங்கனை அதிதி அஷோக் 3-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.