
டோக்கியோ பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவினா பென் படேல் பதக்கத்தை உறுதி செய்தார்.
மாற்றுதிறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டித் தொடர், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் கோலாகலமாகத் தொடங்கியது. கோடைகால ஒலிம்பிக் போட்டியைத் தொடர்ந்து டோக்கியோவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக்சில், 162 நாடுகளை சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் 22 வகையான விளையாட்டுகளில் நடைபெறும் 539 பதக்க போட்டிகளில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.
முதல் நாளில் தொடக்க விழா மட்டுமே நடந்தது. டோக்கியோ பாராலிம்பிக் போட்டியின் 4வது நாளான இன்று, டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினா படேல் அமர்ந்த நிலையில், ஜாய்ஸ் டி ஒலிவியராவுடன் விளையாடினார். டேபிள் டென்னிஸ் காலிறுதிப் போட்டியில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். காலிறுதிப் போட்டியில் செர்பிய வீராங்கனையை 0-3 என்ற கேம் கணக்கில் வீழ்த்தினார் பவினா. நடப்பு பாராலிம்பிக் சாம்பியனான செர்பிய வீராங்கனை போரிஸ் லாவை இந்திய வீராங்கனை பவினா வீழ்த்தினார்.