டெல்லியில் 150 புதிய மின்சார பேருந்துகள் அறிமுகம் – 3 நாட்கள் இலவச பயணம்

தலைநகர் டெல்லியில் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் 150 மின்சார வாகனத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மக்கள் இலவசமாக பயணிக்கலாம் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் நிலவும் கடுமையான காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் டெல்லி அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதன் ஒரு பகுதியாக  மின்சாரத்தில் இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்களை அதிக அளவில் பொதுமக்கள் பயன்படுத்துவதை டெல்லி அரசு ஊக்குவித்து வருகிறது.

பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக டெல்லி அரசாங்கத்தின் சார்பில் 150 புதிய மின்சார வாகனங்கள் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளில் அடுத்த 3 நாட்களுக்கு பொதுமக்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. மேலும் டெல்லி போக்குவரத்து துறைக்கு சொந்தமான டிப்போக்களில் மின்சார வாகனங்களின் பேட்டரிகளை சார்ஜ் செய்யும் மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 1 =