டெல்லியில் பெண் காவலர் படுகொலை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் விஜயா தியேட்டர் அருகில் தமிழ்நாடு தவ்கீத் ஜாமாத் அமைப்பினர் சார்பில் டெல்லியில் கடந்த வாரம் சபியா என்ற பெண் காவலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் அதன்  மாவட்ட தலைவர் பக்ருதீன் தலைமையிலும் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் முகமது அலி அவர்கள் முன்னிலையிலும் உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி 

ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக உலக அளவில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இதனையொட்டி மத்திய  அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளர் இயாஸ், மாவட்ட பொருளாளர் அப்துல் ஹமீது, மாவட்ட துணைத் தலைவர் இர்பஃன், மாவட்ட துணை செயலாளர்கள் சாதிக் அஷ்ரப்அலி ரியாஸ், அஜீஸ்கான், பெரோஸ்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர், மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

51 − 43 =