டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவுடன்  அண்ணாமலை சந்திப்பு

பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்து பேசியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திடீர் பயணமாக இன்று காலை 7 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி செல்லும் அண்ணாமலை பாஜக தலைவர்களை சந்தித்து ஆலோசனை செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவை பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது தமிழகத்தின் அரசியல்கள நிலவரம், ஆளுநர்-முதல்வர் மோதல் விவகாரம், அதிமுகவுடனான கூட்டணி குறித்து ஆலோசனை நடத்திய முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் வரும் 28-ம் தேதி “என் மண் என் மக்கள்” என்ற பெயரில் 200 நட்கள் நடைபெறவுள்ள, பாதயாத்திரை தொடர்பாகவும், நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழக பாஜக மேர்கொண்டிருக்கும் பனிகள் தொடர்பாகவும் ஜெ.பி.நட்டாவுடன் அண்ணாமலை ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.