டெல்லியில் இளம் பெண் காவல்துறை அதிகாரி கூட்டு வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், இச்சம்பவத்திற்கு நீதி கிடைக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி சங்கம் விகார் பகுதியில் கூட்டுகுடும்பத்துடன் வசித்து வந்த 21 வயதான இளம் காவல்துறை அதிகாரி நான்கு மாதங்களுக்கு முன்பு தான் டெல்லியில் உள்ள சிவில் பாதுகாப்புதுறையில் அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி பணிக்கு சென்ற அவர் வீடு திரும்பாத்தால், பெற்றோர் பல இடங்களில் தேடியும் மகள் கிடைக்கவில்லை என்பதனால் அவரது அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த பின்னரும், மகளை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று மனு அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து காணாமல் போன அப்பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அவரை கடத்திய கும்பலானது கூட்டு பலாத்காரம் செய்து உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தி கிழித்து கொலை செய்துள்ளது நாடு முழுவதும் அதிவடையச்செய்தது.
இந்நிலையில் அப்பெண்ணிற்கு ஏற்பட்ட சம்பவத்திற்கு நீதி கிடைக்க வலியுறுத்தி டெல்லியில் உள்ள பொதுமக்களும், சிறுபான்மையினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நாடு முழுவதும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுத்து வருகின்றன. அதே போல சமூக வலைதளங்களிலும் #JusticeForRabiya என ஹாஸ்டேக்கிலும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணி கூறியுள்ளதாவது:- ராஃபியா ஒரு சிவில் டிபென்ஸ் அதிகாரி. கூட்டுபாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, மார்பகங்கள் வெட்டப்பட்டு, தொண்டை அறுக்கப்பட்டு, அந்தரங்க உறுப்புகள் சிதைக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டிருக்கிறார் என்கிற செய்தியைப் படிக்கவே பயங்கரமாக உள்ளது.
இவர் டெல்லி லாஜ்பத்நகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றினார். அங்கு நடக்கும் ஊழலை அவர் வெளிக்கொண்டு வராமல் தடுக்க இப்படி நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த கொடூரமான குற்றவாளிகள் உடனடியாக விரைவு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு தூக்கிலிடப்படவேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அச்சமூட்டும் அளவிற்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதை தடுப்பதற்கு ஆரம்பகல்வி முதலே பெண்கள் சமத்துவம், மரியாதை, பெண்கள் வெறும் உடல் அல்ல என்பது பற்றி குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும். குற்றவாளிகளை விரைவாக விசாரித்து கடுமையாக தண்டிக்கவேண்டும். பாலியல் குற்றவாளிகளை தண்டிப்பதோடு மடுமல்லாமல் பாலியல் குற்றவாளிகளை மனசாட்சியில்லாமல் காப்பாற்ற முயற்சிப்பதும், வெட்கமில்லாமல் பொதுவெளியில் ஆதரிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படவேண்டும். சமூகம் இதுபோன்ற ஆபத்தான நபர்களை புறக்கணிக்க வேண்டும். அப்பொழுதுதான் இதுபொன்ற பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறையும் என தெரிவித்துள்ளார்.