டெல்டா வகை வைரஸ், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும் தாக்கும் : இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அதிர்ச்சி தகவல்

உருமாறிய டெல்டா வகை வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும் தாக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

டெல்டா வகை வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும் தாக்கும் என்ற அதிர்ச்சி தகவல் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் நடத்திய சோதனையில் வெளியாகி உள்ளது. ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் சென்னையில் ஆய்வு ஒன்றிய நடத்தியது. தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களில் டெல்டா வகை வைரஸ் தொற்று குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும் டெல்டா வைரஸ் தாக்கி வருவது உறுதியாகி உள்ளது.

இருப்பினும் முதல் அலையை விட உயிரிழப்புக்கள் பெருமளவு குறைந்துள்ளதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. இதனிடையே 50 கோடி கொரோனா பரிசோதனை என்ற மைல்கல்லை இந்தியா எட்டி இருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.குறிப்பாக நாடு முழுவதும் கடந்த 55 நாட்களில் 10 கோடி கொரோனா சோதனைகள் செய்யப்பட்டு இருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் ஒரே நாளில் 34,401 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 24 மணி நேரத்தில் 530 உயிரிழப்புகள் பதிவாகி இருக்கின்றன.கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இதுவரை 56.64 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டு இருப்பதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 3 = 4